பாஜக எதிரான கவுண் டவுன் ஸ்டார்ட் – ஆர்.எஸ்.பாரதி பேச்சு..!
அமலாக்கத்துறையின் மூலம் அச்சுறுத்த நினைக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிரான கவுண்டவுன் தொடங்கிவிட்டது.., என ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று காலை அமலாக்கதுறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் அவரது மகனும் கள்ளக்குறிச்சி எம்.பி.யும் ஆன கெளதம சிகாமணி விக்கிரவண்டியில் நடத்தி வரும் சூர்யா பொறியியல் கல்லூரியில் அமலாக்கதுறையினர்.., சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சைதாப்பேட்டையில் இருக்கும் அமைச்சர் பொன்முடி வீட்டிற்கு திமுக செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வந்திருந்தார்.., அவரின் வீட்டின் உள்ளே செல்வதற்கு ஆர்.எஸ்.பாரதி அனுமதி கேட்டுள்ளார். அதற்கு அமலாக்கத்துறையினர் மறுப்பு தெரிவித்துள்னர்.
பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆர்.எஸ்.பாரதி “கடந்த மார்ச் 1ம் தேதி தனது பிறந்தநாளான தேசிய தலைவர்கள் முன்னிலையில் கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின் யார் பிரதமராக வர வேண்டும் என்பதை விட யார் பிரதமராக வரக்கூடாது என்பது தான் முக்கியம் என தெரிவித்தார்.., அந்த நாளிலிருந்து மத்திய அரசு ஆளுநரை வைத்து நெருக்கடி கொடுத்து வருகிறது. அதற்காக அமலாக்க துறையை ஏவி விட்டுள்ளது.
பாட்டனாவில் நடைபெற்ற எதிர்கட்சி கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர்.., பெங்களுருவில் தற்போது இரண்டு நாட்களாக எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அதன் மீதான கவனத்தை திசை திருப்புவதற்காக இன்று அமைச்சர் பொன்முடியின் வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
என்ன வழக்கின் கீழ் அமைச்சர் பொன்முடி வீட்டில் அவர்கள் சோதனை நடத்தி வருகின்றார்கள்.., என்பதை காண்பதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன்.., ஒரு வழக்கறிஞ்சர் என்ற முறையில் உரிமையோடு நான் வந்துள்ளேன். ஆனால் அமலாக்க துறையினர் அதற்கு பதில் அளிக்கவில்லை.
கடந்த 2006 ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை பொன்முடி அமைச்சராக இருந்த பொழுது எழுந்த புகாரின் பெயரில் மறைந்த தலைவர் செல்வி ஜெ. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த பொழுது வழக்கு பதிய பட்டது. அப்போது பதிய பட்ட வழக்கிற்கு தான் இப்போது இந்த சோதனை. 12 ஆண்டுக்கு பின் இந்த வழக்கை தூசி தட்டி எடுத்து விசாரணை செய்வது சற்று வேடிக்கையாக இருக்கிறது.
அமலாக்கதுறை இதுவரை எந்த வழக்கிலும் குற்றம் நிரூபிக்க படவில்லை.., கர்நாடகாவிலும் இதுபோல தான். கர்நாடகாவில் தற்போது துணை முதல்வராக இருக்கும் டி.கே.சிவகுமாருக்கு அமலாக்கதுறையின் மூலம் பெரும் நெருக்கடி கொடுத்துள்ளார்கள்.., ஆனால் கடந்த சட்ட மன்ற தேர்தலில் இந்தியாவிலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
பாஜகவுக்கு கர்நாடகாவில் என்ன நிலைமை ஏற்பட்டதோ.., அதை நிலைமை தான் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஏற்படும். தற்போது அமைச்சர் பொன்முடியின் விவகாரம் தேசிய பிரச்சனையாக மாறியுள்ளது. அமலாக்கத்துறையின் மூலம் எதிர்கட்சிகளை அச்சுறுத்த நினைக்கும் பாஜகவிற்கு எதிராக நாடு முழுவதும் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது. என ஆர்.எஸ். பாரதி இவ்வாறே பேசினார்.