சினிமா படபானியில் பணம் பறிப்பில் ஈடுப்பட்ட கள்ளகாதலர்கள்… போலீஸ் வலைவீச்சு..!
சேலம் மாவட்டம் அடுக்குமாடி குடியிருப்பு வசந்தம் காலனியை சேர்ந்தவர் மோகனா (வயது 28). கருத்து வேறுபாடு காரணமாக கணவனைப் பிரிந்து தனது இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்தநிலையில் மோகனாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வீரா என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களின் கள்ளக்காதல் சற்று வித்தியாசமானது. அதாவது, இருவரும் சேர்ந்து நூதன முறையில் பணம் பறிப்பதை வழக்கமாக செய்து வருகின்றனர்.
அதன்படி சேலம் ஜாகிர் அம்மாபாளையம் சுந்தரம் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜீவ் (49) என்பவர் நாமக்கல் மாவட்டத்தில் சொந்தமாக நகைக்கடை நடத்தி வருகிறார்.
அவருடன் மோகனாவிற்கு நட்பு ஏற்பட்டுள்ளது. அதனை தனக்கு சதகமாக பயன்படுத்திய மோகனா, அவருடன் பழகி அவரிடம் உள்ள பணம் விவரங்களை அறிந்த அவர் இதுகுறித்து கள்ளக்காதலனிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து, நகைக்கடை அதிபர் ராஜுவிடம் பணம் பறிக்க மோகனாவும், கள்ளக் காதலனும் திட்டம் தீட்டியதோடு, மோகனா, நகைக்கடை அதிபரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு தங்களுக்கு 15 பவுன் நகை வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு வரச் சொல்லி செல்போனில் பேசி உள்ளனர். இதனைத் தொடர்ந்து நகைக்கடை அதிபர் ராஜீவ், ராசிபுரத்தில் இருந்து 15 பவுன் நகையை எடுத்துக்கொண்டு சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த போது அவரை வழிமறித்த மோகனா தனது இருசக்கர வாகனத்தின் மூலம் ராஜீவ்வை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் நகைக்கடை அதிபரை வீட்டினுள் அழைத்து சென்றவுடன், வீட்டின் கதவை சாத்தியுள்ள அவர் ராஜீவின் அருகே மிக நெருக்கமாக சென்று, தனது சேலையை கழட்டி, நகைக்கடை அதிபரின் மீது சாய்ந்துள்ளார்.
இந்த காட்சியை திட்டமிட்டிருந்தப் படி ஜன்னல் வழியாக, வீடியோ எடுத்த கள்ளக்காதலன் வீரா, சிறிது நேரம் கழித்து ஒன்றும் தெரியாதவர் போல வீட்டிற்குள் நுழைந்து கள்ளக்காதலியுடன் நெருக்கமாக இருந்த நகைக்கடை அதிபரை மிரட்டியுள்ளார்.
மேலும் படத்தில் வரும் காட்சிகளை மிஞ்சும் வகையில் வீரா இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் தனது செல்போனில் வீடியோவக உள்ளது என்றும் இதை வெளியில் சொன்னால், உனக்கு அவமானம், ஏற்படும் என்று மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்து போன நகைக்கடை அதிபர் , இதனை வெளியில் சொல்ல வேண்டாம், இதற்காக தான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டுள்ளார். அப்போது அவரிடம் இருந்த இரண்டரை சவரன் தங்க நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ஆகியவற்றை பறித்து கொண்டு ராஜீவ்வை வெளியே அனுப்பி உள்ளனர்.
இதனை தொடர்ந்து வெளியே சென்ற ராஜீவ் தனக்கு நேர்ந்த கொடுமையை குறித்து சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மோகனாவை செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக இருக்கும் கள்ளக்காதலன் வீராவையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்