‘என் மனைவி உனக்கு,உன் மனைவி எனக்கு’ சென்னையை ஆட்டிப்படைக்கும் மோசமான விளையாட்டு!

தற்போது ஆட்டிப்படைக்கும் டிஜிட்டல் யுகத்தில் சமூக வலைதளங்களின் வாயிலாக பல்வேறு வினோதமான நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் சென்னையில் தங்களது வாழ்க்கை துணைகளை சமூகவலைத்தளங்களின் மூலம் மாற்றிக்கொள்ளும் கேவலமான விளையாட்டு நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை ஈ.சி.ஆர் சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் பின்னணியில் இந்த மோசமான விளையாட்டு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ‘மீவீ’ என்ற சேட்டிங் ஆப் மூலம் இந்த துணைகளை மாற்றிக்கொள்ளும் விளையாட்டு நடைபெறுகிறது.

இந்த மோசமான விளையாட்டை 40 வயது கொண்ட தொழிலதிபரும், அவரது மனைவியும் நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த மீவி ஆப் மூலம் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் முதலில் ஜோடிகளின் சந்திப்பு நடக்குமாம்.

பின்பு இந்த நிகழ்ச்சியை நடத்தும் நிர்வாகிகளின் வீடுகளில் வைத்து 2-வது சந்திப்பு நடக்குமாம் இதனால் அந்த தம்பதிகளுக்கு இடையே நல்ல அறிமுகம் ஏற்பட்டு பின்னர், அவர்கள் விரும்பும் ஜோடிகளுடன் வெளியூர் சாகச பயணங்கள் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது. மேலும் அவர்கள் தனிமையில் இருக்கும் வீடியோக்களையும், ஆடியோக்களையும் பதிவு செய்து, வாட்ஸ் அப் குழுக்களில் பகிரப்படும் மோசமான நிகழ்வுகளும் அரங்கேறுகிறது.

சென்னையை மட்டுமில்லாது டெல்லி, பெங்களூரு மற்றும் மும்பை போன்ற நகரங்களிலும் இந்த துணை மாற்றக்கும்பல் செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

What do you think?

‘பெங்களூரை சேர்ந்த பொறியாளருக்கு கொரோனா வைரஸ்’ தெலுங்கானாவில் கண்டுபிடிப்பு!

‘கமலின் இந்த 2 படங்கள் தான் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்’மாஸ்டர் இயக்குனர்!