ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நீதிமன்றம் அதிரடி..!! 15 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்..!! காவலர்களுக்கு பறந்த உத்தரவு..!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்க கொலை வழக்கில் ஏற்கனவே கைது செய்யபட்டு சிறையில் இருக்கும் நிலையில் இன்னும் 15 பேரை குண்டாஸ் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்..
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் அவரது வீட்டின் முன் மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்யபட்டார்., அந்த வழக்கில் பெண்ணை பாலு உட்பட 27 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து அதில் பிரபல ரவுடி என்கவுண்டரில் சுடப்பட்டார்..
தற்போது இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் 7ம் தேதி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள் உட்பட பத்து பேரை காவலர்கள் கைது கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில்., அதில் சம்மந்தப்பட்டுள்ள 10 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டுள்ளது., அதற்கான உத்தரவை சென்னை காவல் ஆணையர் பிறப்பித்துள்ளார்..
இதுவரை கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி, தோட்டம் சேகரின் மனைவி மலர்க்கொடி, ஹரிகரன், சதீஷ்குமார், ஹரிஹரன் சிவா, பிரதீப், முன்னாள் பாஜக நிர்வாகி அஞ்சலை, முகிலன், விஜயகுமார் என்கிற விஜய், விக்னேஷ் என்கிற அப்பு, முன்னாள் காங்கிரஸ் நிர்வாகியும் பிரபல தாதா நாகேந்திரன் மகனுமான அஸ்வத்தாமன், ராஜேஷ், செந்தில்குமார் மற்றும் கோபி ஆகிய 15 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர்களை சிறையில் அடைக்கவும் சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்…
இதுவரை 10 பேர் இக்கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் 25 பேர் மீது குண்டாஸ் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. இன்னும் சில நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட இருந்த நிலையில் 25 பேர் மீது குண்டாஸ் தடுப்பு சட்டம் போடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது..
குறிப்பாக மக்களுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படும் கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல் மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள் உள்பட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல்துறை சார்பில் சென்னையின் அனைத்து காவலர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..