மணிப்பூர் புலனாய்வு குழு கோரிக்கையை மறுத்த நீதி மன்றம்..!!
மணிப்பூர் மக்களை கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டது தொடர்ந்து தொடரப்பட்ட வழக்கை திரும்பப் பெற கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிக்கைவிடுத்துள்ளார் . சில குறிப்பிட்ட சமூகத்தின் மீது குற்றம் சாட்டி அவர்கள் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரணை செய்வது கடினம் என தலைமை நீதிபதி கூறியிருந்தார்.
அந்த மனுவில் வன்முறை, போதைப் பொருள் கடத்தல், வனப்பகுதி அழித்தல் என அனைத்தையும் ஒரே மனுவில் குறிப்பிட்டு இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்திருந்தார். சில குறிப்பிட்ட கோரிக்கைகளை மட்டும் வலியுறுத்தி மனுத்தாக்கல் செய்தால் அந்த வழக்கை மட்டும் விசாரணைக்கு எடுத்து விசாரணை செய்யலாம் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து இன்று மதியம் 12 மணியளவில் மணிப்பூர் கலவரத்தில் சிறப்பு புலனாய்வு குழுவின் படி விசாரணை அமைக்க கோரிய வழக்கை விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். மணிப்பூர் வன்முறை தொடர்பான வழக்கை விசாரணை எடுத்து நடத்துவது மிகவும் கடினமானது என தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.
குறிப்பிட்ட சில பிரிவு மக்களை தீவிரவாதிகள் போல் செயல்படுத்தும் வகையில் இந்த மனு உள்ளது. என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். மணிப்பூரில் சிறப்பு புலனாய்வு விசாரணை கோரிய மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவிக்கிறேன் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..