அருமையான ரெசிபி தட்டுக்கறி செய்யலாமா..
தேவையான பொருட்கள்:
ஆட்டுக்கறி 500 கிராம்
எண்ணெய் 5 ஸ்பூன்
இலவங்கம் இரண்டு
கிராம்பு மூன்று
வெங்காயம் ஒன்று பெரியது
இஞ்சி பூண்டு விழுது மூன்று ஸ்பூன்
கொத்தமல்லி இலை சிறிது
தண்ணீர் தேவையானது
உப்பு தேவையானது
மஞ்சள்தூள் அரை ஸ்பூன்
மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
மசாலா அரைக்க:
துருவிய தேங்காய் மூன்று ஸ்பூன்
சீரகம் அரை ஸ்பூன்
மிளகு ஒரு ஸ்பூன்
சோம்பு ஒரு ஸ்பூன்
செய்முறை:
முதலில் வெங்காயத்தை நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
தேங்காயை துருவிக் கொண்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான நீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து அதில் சீரகம் அரை ஸ்பூன், சோம்பு ஒரு ஸ்பூன், மிளகு ஒரு ஸ்பூன் சேர்த்து லேசாக வறுத்து நன்றாக ஆறவைத்து அதனை பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதின் இலவங்கம் 2, கிராம்பு 3 சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
வெங்காயம் வதங்கியதும் மூன்று ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
பின் மஞ்சள் தூள் அரை ஸ்பூன், மிளகாய்த்தூள் இரண்டு ஸ்பூன் சேர்த்து வதக்கி அதில் 500 கிராம் ஆட்டு இறைச்சி சேர்த்து வதக்க வேண்டும்.
இதில் முக்கால் கப் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
குக்கரை மூடி மூன்று விசில் வரும் வரை வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு ஃபேனை அடுப்பில் வைத்து அதில் மீதமுள்ள எண்ணெய் சேர்த்து அதில் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
பின் அரைத்த மசாலா சேர்த்து கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி சமைக்க வேண்டும்.
பின் வேகவைத்த கறி சேர்த்து மிதமான தீயில் வேகவைக்க வேண்டும்.
நன்றாக நீரி சுண்டி வந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்க வேண்டும்.
அவ்வளவுதான் அருமையான தட்டுக்கறி தயார்.