கோவிட்-19 : பலி எண்ணிக்கை 1,765 ஆக அதிகரிப்பு

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,765 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் மாகாணத்தில் பரவிய கொரோனா வைரஸ், அடுத்த சில நாட்களில் பெய்ஜிங், ஷாங்காய் என அந்நாட்டின் பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. சீனாவில் மட்டும் 70,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதுவரை கொரோனா வைரஸால் 1,765 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட 60,000-க்கும் மேற்பட்டோர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவர் குழுவுடன், சீன மருத்துவ நிபுணர்கள் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல், ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் சென்ற டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் உள்ள 40 அமெரிக்கர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

What do you think?

ஆர்சிபியின் கூல் லோகோ – பும்ரா கிண்டல்

தூத்துக்குடி அருகே சிஏஏ எதிர்ப்பு போராட்டம் – விண்ணதிரச் செய்த முழக்கங்கள்!