பெண் காவலர்களுக்கான அசத்தல் திட்டங்கள்..!! முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை..!!
பெண் காவலர்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறை அளிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது பெண் காவலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற “இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழா” நடைபெற்றது. முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு காவல் துறையினர் அணிவகுப்பு நடைபெற்றது..
அதன் பின்னர் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு விருது பதக்கங்கள் வழங்கி கவுரவித்தார். அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இன்று காவல்துறை சார்பாக நடக்கும் விழாவில் பங்கெடுக்கிறேன் என்று சொன்னால் என்னுடைய துறையின் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சி என்பதால், கூடுதல் மகிழ்ச்சியை நான் அடைகிறேன்..”
காவல்துறை, ஊழல் தடுப்பு பிரிவு மற்றும் கண்காணிப்புத் துறை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, ஊர்க்காவல் மற்றும் குடிமை பாதுகாப்புப்படை, தடய அறிவியல் ஆகிய துறைகளில் பணியாற்றும் காவலர்களுக்கு பதக்கங்கள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பெருமைமிகு மாநிலமாக திகழ்வதற்கு காரணம்.., தமிழ்நாடு காவல்துறைக்கு அதிகாரிகளின் பங்களிப்பு பெரும் அளவு இருக்கிறது. அப்படி சிறப்பாக பணியாற்றும் காவலர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுத்துள்ளோம் இன்னும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தவுள்ளோம். M
பெண் காவலர்களுக்கான திட்டங்கள் :
தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு ஒரு ஆண்டு மகப்பேறு விடுமுறை அளிக்கப்படும்.
அந்த விடுமுறை முடிந்து மீண்டும் அவர்கள் பணிக்கு திரும்பும்போது அவர்கள் குழந்தைகளை பராமரிப்பதில் பல சிரமங்கள் ஏற்படுவது தொடர்பாக தொடர்ந்து அவர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதிக்கும் குற்றச்செயல் பிரச்னைகளை தீர்ப்பதில் நம்முடைய பெண்காவலர்கள் மிக முக்கிய பங்காற்றுகிறார்கள்.
எனவே, அப்படிப்பட்ட குற்றங்களை கையாளுவதில் பெண் காவலர்களின் தொழில்முறைத் திறன்களை மேலும் மேம்படுத்தும் வகையில், பெண் கடத்தல் குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களை விசாரித்து தீர்ப்பதற்கு அவர்களுக்கு சிறப்புத் திறன் பயிற்சி அளிக்கப்படும்.
காவலர்களுக்கான சிறப்பு திட்டம் :
ஒரு ஆண்டுக்கு ஒரு முறை காவலர்கள் சொந்த ஊர் அல்லது அவர்கள் குடும்பதினர் தங்கியுள்ள ஊர்களுக்கு மாற்றப்படுவார்கள்..
உங்களுக்கு இருக்கும் கடமையும், பொறுப்பும் மிக மிகப் பெரியது. மக்களைக் காப்பாற்றுவது உங்கள் கடமை..
மக்களை பாதுகாப்பது உங்கள் பொறுப்பு.. அதை எந்தக் குறையும் இல்லாமல் நீங்கள் நிறைவேற்றி தாருங்கள் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்… என இவ்வாறே முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..