அரியலூருக்கு வந்த அசத்தல் திட்டங்கள்..!! இது சூப்பரா இருக்கே..!!
அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 1.03 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான புதிய வளர்ச்சி திட்டப்பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கிவைத்து முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்தார்.
செந்துறை ஊராட்சி ஒன்றியம் தளவாய் ஊராட்சி ஈச்சங்காடு மற்றும் அசாவீரன் குடிகாடு கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள பகுதிநேர நியாய விலைக்கடைகளை திறந்து வைத்து முதல் விற்பனையினை தொடங்கி வைத்தார்.
அசாவீரன் குடிகாடு ஊராட்சியில் புதிய நூலக கட்டடம் கட்டும் பணியினை துவக்கிவைத்தார். பின்னர் பெரியாக்குறிச்சி கிராமத்தில் புதிய கிராம செயலக கட்டடத்தினையும் தொடர்ந்து பெரியாக்குறிச்சி ஊராட்சி இலை கடம்பூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 2 வகுப்பறை கட்டடத்தினையும் அதனைத் தொடர்ந்து.
வஞ்சினபுரம் ஊராட்சியில் அங்கன்வாடி மையகட்டடத்தினையும் மக்கள் பயன்பாட்டிற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஊரகவளர்ச்சி முகாமைத் திட்ட இயக்குநர் ஊராட்சிமன்றத் தலைவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..