அனைத்து கலைஞர்களுக்கும் மதிப்பூதியம்…!! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு…!!
சென்னையில், தை மாதம் தொடக்கத்தில் பொங்கல் நாட்களில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா என்கிற பிரம்மாண்ட கலைவிழா கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை சென்னையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி 13ம் தேதி மாலை 6.00 மணியளவில் கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ,ரா நெடுஞ்சாலையியில் உள்ள ஏகாம்பர நாதர் திடலில் திறந்து வைத்தார்.
சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவில்’ தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ள 1000க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர். நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், இறை நடனம், தப்பாட்டம், துடும்பாட்டம், பம்பையாட்டம், கைசிலம்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், சேவையாட்டம், கோலாட்டம், ஜிக்காட்டம், ஜிம்பளா மேளம், பழங்குடியினர் நடனம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம், வில்லுபாட்டு, கணியன் கூத்து, தெருக்கூத்து, பாவைக்கூத்து, தோல் பாவைக்கூத்து, நாடகம், கிராமிய ஆடல், பாடல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அனைத்து கலைஞர்களுக்கும் நாளொன்றுக்கு 5000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருந்தார், அதன் படி 260 கலைஞர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் மதிப்பூதியம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியைத் தொடர்ந்து கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் ஆகிய எட்டு நகரங்களிலும் இந்த ஆண்டு சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.
இந்நிகழ்ச்சியில் சுற்றுசூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, தூத்துக்குடி நாடளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மாநகர மேயர் ஆர்.பிரியா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..