கிரிக்கெட் வீரர்கள் எதற்கு சுவிங்கம் சாப்பிடுராங்கனு தெரியுமா..?
கிரிக்கெட் விளையாட்டானது உலகின் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றாகும். அப்படி விளையாடும்போது கிரிக்கெட் வீரர்கள் அடிக்கடி சுவிங்கம் மெல்லுவதை பார்த்திருப்போம். இதற்கு ஒரு பெரிய காரணம் இருக்கிறது அவற்றை பற்றி பார்போமா.
முதலில் இந்த சுவிங்கம் மெல்லும் பழக்கம் எப்போது தோன்றியது என தெரியவில்லை ஆனால் 90களில் நம் விளையாட்டு வீரர்கள் சுவிங்கம் மெல்லுவதை பார்த்திருப்போம். அதற்கு பிறகு கிரிக்கெட் தரவரிசையில் முக்கியமான இடம் பிடித்திருக்கும் பல வீரர்கள் சுவிங்கம் மெல்லுவதை காணலாம். அப்படி இதற்கு என்னதான் காரணமாக இருக்கும் என பார்க்கலாம் வாங்க.
கிரிக்கெட் விளையாட்டானது மிகுந்த மன அழுத்தம் அளிக்கக்கூடிய ஒரு விளையாட்டாகும். வீரர்கள் விளையாட்டில் வைக்கும் ஒவ்வொரு அடியும் விளையாட்டிற்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். மற்ற சிந்தனைகள் அவர்களை நெருங்காமல் இருக்க வீரர்கள் சுவிங்கம் மெல்லுவதை பழக்கமாக வைத்திருக்கிறார்கள். சுவிங்கம் மெல்லும்போது கவனம் ஒன்றாக இருக்கும் இதனால் ஆட்டம் சிறப்பாக ஆட முடியும்.
மேலும் சுவிங்கம் மெல்லும்போது உமிழ்நீர் அதிகமாக சுரக்கிறது, இதனால் ஆட்டத்தின்போது வீரர்களுக்கு தொண்டை மற்றும் வாய் ஈரப்பதமாக இருக்கிறது.
குறிப்பாக ஆஸ்திரேலியா வீரர்கள் சுவிங்கம் மெல்லுவதை பழக்கமாக வைத்திருக்கிறார்கள், இவர்கள் ஆட்டத்தில் பல பதற்றமான சூழலை எதிர்கொள்கிறார்கள் அப்போது சுவிங்கமானது அவர்களின் பதற்றத்தை குறைத்து மனதை ஒருநிலையோடு விளையாட உதவுகிறது.