முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளனர் சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன் பங்கர், திருநங்கையாக மாறியுள்ளார். அவருக்கு பிரபல கிரிக்கெட் வீரர்கள் தங்கள் நிர்வாண படத்தை அனுப்பி வைத்ததாக குற்றம் சாட்டியுள்ளார். Cricketers sent me nude photos
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கருக்கு ஆர்யன் என்ற மகன் உண்டு. இவர், தன்னை திருநங்கையாக அறிவித்துக் கொண்டுள்ளார். இதற்காக அறுவை சிகிச்சையும் செய்து கொண்டுள்ளார். இப்போது, தனது பெயரை ஆன்யா என்று மாற்றிக் கொண்டுள்ளார்.
திருநங்கையாக மாறியது குறித்து, லல்லான்டாப் யூடியூப் சேனலுக்கு அவர் ஒரு பேட்டியளித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது, ‘எனக்கு 8,9 வயதாக இருக்கும் போதே என் உடலில் நான் மாற்றத்தை உணர்ந்தேன். எனது தாயாருக்கு தெரியாமல் அவரின் ஆடைகளை அணிந்து பார்ப்பேன். ஷர்பராஸ்கான், ஜெய்ஸ்வால் போன்ற கிரிக்கெட்டர்களுடன் சேர்ந்து விளையாடியிருந்தாலும் என்னை பெண்ணாகவே உணரத் தொடங்கினேன்.
ஆனால், எனது தந்தையின் பொதுவாழ்க்கையை கருத்தில் கொண்டு அமைதியாக இருந்தேன். ஒரு கட்டத்தில் என்னிடத்தில் இருந்த மாற்றத்தை கவனித்த கிரிக்கெட் வீரர்கள் கூட எனக்கு அவர்களின் நிர்வாண படத்தை எனக்கு அனுப்பி வைத்தனர். பிரபலமான ஒரு மூத்த கிரிக்கெட் வீரர் என்னை தனியாக படுக்கைக்குக் கூப்பிட்டார்.’ என்று தெரிவித்துள்ளார்.
திருநங்கையாக மாறிய பிறகும் ஆன்யா கிரிக்கெட் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறார். இங்கிலாந்தில் லியாயஸ்டர்ஷயர் மற்றும் இந்தியாவில் இஸ்லாம் ஜிம்கானா அணிகளுக்காக விளையாடி வந்தார். இந்த நிலையில், கடந்த 2023 ம் ஆண்டு ஐ.சி.சி எடுத்த முடிவு ஆன்யாவின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அதாவது, திருநங்கைகள், பெண்கள் கிரிக்கெட்டில் விளையாட தடை விதித்தது. இதையடுத்து, ஆன்யாவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து போனது.
அப்போது, ஆன்யா ஐ.சி.சியின் இந்த முடிவு தனக்கு மிகுந்த வேதனையை அளிப்பதாக இன்ஸடாவில் பதிவு வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Cricketers sent me nude photos