டெல்லி கலவரத்திற்கு குற்றவியல் நீதித்துறை விசாரணை அமைக்கப்பட வேண்டும் – தொல்.திருமாவளவன் எம்.பி

சென்னை விமான நிலையத்தில் நிருபர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., கூறியதாவது ,டெல்லியில் யார் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. மதவெறி பிடித்த சக்திகள் வீதிகளில் துப்பாக்கி ஏந்தி வந்து போராடுகின்றவர்கள் மீது தாக்கி படுகொலை செய்துள்ளனர்.

உச்சநீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம் தலையிட்டு ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை என்று கண்டித்த பின்னர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். கேள்வி எழுப்பிய டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் தற்போது பஞ்சாப், ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றங்களில் அரசியல் தலையீடு உள்ளதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

பா.ஜ.க முன்னணி தலைவர்கள் வன்முறைக்குக் காரணமாக இருந்துள்ளனர். அவர்கள் பெயர்களைச் சுட்டிகாட்டி ஏன் வழக்குப் பதியவில்லை என்று கேட்டதற்காகவே பஞ்சாப், அரியானா நீதிமன்றத்திற்கு தூக்கி வீசப்பட்டு இருக்கிறார்.

நீதித்துறையில் இந்த அளவுக்கு அரசியல் தலையீடு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தப் போக்கு கைவிடப்பட வேண்டும். டெல்லி வன்முறை முழுமையாக நிறுத்தப்பட்டு அமைதி திரும்ப வேண்டும்.

உயிர் பலிகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இது தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கவேண்டும். டெல்லி கலவரத்திற்கு குற்றவியல் நீதித்துறை விசாரணை அமைக்கப்பட வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 1ந் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது” எனத் தெரிவித்தார்.


What do you think?

தமிழகத்தில் கலவரம் வெடித்தால் அதற்கு எச்.ராஜா தான் காரணம் – தமிமுன் அன்சாரி !

டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம்: கெஜ்ரிவால் !