கொரோனாவுக்காக தன் சொகுசு ஹோட்டலை இலவச மருத்துவமனையாக மாற்றும் ரொனால்டோ!

கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றை கொடுக்க முன்வந்துள்ளார் கிறிஸ்டியானோ ரோனொல்டோ.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. விளையாட்டு மற்றும் திரையுலக பிரபலங்கள் கொரோனா விழிப்புணர்விற்காக பல்வேறு செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் உலகின் மிகசிறந்த கால்பந்து விளையாட்டு வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனக்கு சொந்தமான சொகுசு ஹோட்டலை கொரோனா சிகிச்சை மருத்துமனையாக மாற்ற முன்வந்துள்ளார்.

போர்சசுக்கல் நாட்டை பூர்வீகமாக கொண்ட ரொனால்டோ அந்நாட்டில் உள்ள தனக்கு சொந்தமான சொகுசு ஹோட்டல் ஒன்றை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துமனையாக மாற்ற முன்வந்துள்ளார். மேலும் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் மருத்துவ செலவு மற்றும் அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், ஊழியர்களுக்கான ஊதியம் அனைத்தையும் தானே தருவதாக தெரிவித்துள்ளார்.

ரொனால்டோவின் இந்த செயலை அவரது ரசிகர்கள் மட்டுமில்லாது பலதரப்பு மக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

What do you think?

திருமணமான ஒரே நாளில் காதல் ஜோடி தற்கொலை!

வீரர்கள் தயாராகும் படி ஒலிம்பிக் கமிட்டி அறிவுறுத்தல்!