5 வயது வாய்பேச முடியாத சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..! 64வயது முதியவர் கைது..!
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த குட்டியம் கிராமம் பள்ளத்தெருவை சேர்ந்தவர் உதயன் (வயது 64) அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இவரது பேத்திக்கு திருமணம் முடிந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த வாய் பேச முடியாத 5 வயது சிறுமியை நேற்று இரவு விவசாய நிலத்திற்கு அழைத்து சென்றதோடு சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். சிறுமியை நீண்ட நேரம் காணததால் சந்தேகமடைந்த தாய் தேடி சென்ற போது, அந்த கொடூர சம்பவத்தை நேரில் பார்த்து கூச்சலிட்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த கலவை போலீசார் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை கைது செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியை வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்..
– லோகேஸ்வரி.வெ