ஆந்திராவில் ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..! பரபரப்பான ஆந்திரா..!
கடந்த ஜூலை 29ம் தேதி அன்று ஹரிகிருஷ்ணா டிராவல்ஸ்க்கு சொந்தமான ஸ்லீப்பர் கோச் பேருந்து ஒன்று ஆந்திரா மாநிலம் நிர்மலிலிருந்து புறப்பட்டு ஐதராபாத் நோக்கி சென்றுள்ளது. இந்த பேருந்து இரவு புறப்பட்டதால் அதில் சித்தையா மற்றும் கிருஷ்ணா என்ற 2 ஓட்டுனர்கள் இருந்துள்ளனர். அன்று இரவு பேருந்தை சித்தையா ஓட்டியதாக சொல்லப்படுகிறது.
அப்போது நிர்மல் பேருந்து நிலையத்தில் 27 வயது பெண் ஒருவர் தனது 3 வயது மகளுடன் எறியுள்ளார். இதனை கவனித்த கிருஷ்ணா அந்த பெண்ணிடம் சென்று நீங்கள் இருக்கும் சீட் உங்களுக்கு வசதியாக இருக்காது கடைசி ஸ்லீப்பர் கோச் உங்களுக்கு வசதியாக இருக்கும்.. என சொல்லி இருக்கையை மாற்றி கொடுத்துள்ளார்.
அதன் காரணத்தை அறியாத அந்த பெண் கடைசி சீட்டுக்கு சென்றுள்ளார்.., பின் நள்ளிரவு ஆனதும் கிருஷ்ணா அந்த பெண்ணின் பக்கத்தில் சென்று அந்த பெண்ணின் வாயில் துணியை வைத்து மூடி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். அந்த பெண் கூச்சலிட்டு மற்றவர்களை உதவிக்கு அழைப்பதற்குள் அத்து மீறியுள்ளார்.
இதனால் பரிதவித்த அந்த பெண் உடனடியாக போலீசில் நடந்த சம்பவம் குறித்து தகவல் கொடுத்துள்ளார் அளித்துள்ளார். அதன் பேரில் தர்நாகா மெட்ரோ ரயில் ஸ்டேஷன் அருகே நின்றுள்ளனர் போலீசை பார்த்த கிருஷ்ணா அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.. பின் அந்த பெண்ணிடம் புகாரை பெற்று தப்பி ஓடிய கிருஷ்ணா மற்றும் சித்தையாவை காவலர்கள் இன்று கைது செய்துள்ளனர்.
ஓடும் பேருந்தில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..