இன்று சென்னையில் நடக்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோத உள்ளன.
16-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் கடந்த மார்ச் 31-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. தற்போது லீக் சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. குஜராத் அணியுடன் முதல் போட்டியில் தோல்வியைத் தழுவிய சென்னை சூப்பர் கிங்ஸ் இன்றைய போட்டியில் லக்னோ அணியை எதிர்கொள்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு தோனி விளையாடுகிறார்.
முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வி அடைந்த நிலையில், இன்றையப் போட்டியில் வென்று முதல் வெற்றியை பதிவு செய்யும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.