கார் பழுது பார்க்கும் கடையில் இருந்து பேட்டரிகளை திருடிச்சென்ற மர்ம கும்பல்….
நாட்டறம்பள்ளி அருகே கார் பழுது பார்க்கும் கடையில் இருந்து பேட்டரிகளை திருடிச்சென்ற மர்ம கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சின்ன மூக்கனூர் பகுதியைச் சேர்ந்த லோகநாதன், செந்தில்குமார் ஆகியோர் கார் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இரவு வழக்கம்போல் கடையை அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டு, மறுநாள் காலை கடையை திறந்து பார்த்தபோது வாடிக்கையாளர்களின் கார்களில் இருந்து 20 பேட்டரிகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது, கடையின் உரிமையாளர்கள் கடையை அடைத்து விட்டு சென்ற பின்னர், மர்ம நபர்கள் பேட்டரிகளை திருடிச்செல்லும் காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து காரின் பேட்டரியை திருடிச்சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.