வாழைப்பூ கட்லெட் ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
- 1 கப் வாழைப்பூ பொடியாக நறுக்கியது
- 2 உருளைக்கிழங்கு வேகவைத்து மசித்தது
- 1 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது (அ) 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
- 1/4 டீஸ்பூன் சாட் மசாலா தூள்
- 1 வெங்காயம் பொடியாக நறுக்கியது
- 1/4 டீஸ்பூன் சீரக தூள்
- கையளவு கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது
- 1/2 கப் சோள மாவு கரைசல்
- 1 கப் பிரட் தூள்
- 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- தேவையானஅளவு உப்பு
- தேவையானஅளவு எண்ணெய்
செய்முறை:
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய வாழைப்பூவை சேர்த்து சில நிமிடங்களுக்கு வதக்கி பின் ஆறவைக்க வேண்டும்.
பின் வதக்கிய வாழைப்பூவுடன் மசித்த உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், வெங்காயம், மல்லி இலை, இஞ்சி பூண்டு விழுது, சீரகத்தூள் மற்றும் சாட் மசாலாத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்துக் பிசைந்துக் கொள்ள வேண்டும்.
மாவிலை உருண்டைகளாக எடுத்து கையில் வைத்து கட்லெட் போல தட்டிக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி சோள மாவினை சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும்.
பிரட் தூளினை இரு தட்டில் போட்டு வைக்கவும்.
கட்லெட் எடுத்து சோள மாவில் நனைத்து பின் பிரட் தூளில் முக்கி எடுத்து தனியே வைக்கவும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கட்லெட்டுகளை சேர்த்து இருபுறமும் மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான வாழைப்பூ கட்லெட் தயார்.