தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு

தெலுங்கு துணை நடிகை ஸ்ரீரெட்டி அவதூறாக பேசியதாக நடிகை கராத்தே கல்யாணி, அளித்த புகாரால் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தெலுங்கு திரையுலகில் அடிக்கடி புயலை கிளப்பி வருபவர் துணை நடிகை ஸ்ரீரெட்டி, நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி படுக்கைக்கு அழைத்தனர் என்றும், அதன் பின்னர் ஏமாற்றி விட்டதாகவும் புகார் தெரிவித்திருந்தார். இந்த புகாரில் தமிழ் சினிமா நட்சத்திரங்களும் சிக்கினர். இதற்காக அரை நிர்வாண போராட்டமும் நடத்தி அனவருக்கும் அதிர்ச்சி அளித்தார். மேலும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர்களின் பெயர்களையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டு அதிரடி காட்டினார்.

தெலுங்கு நடிகர் பவன் கல்யாணையும் கடுமையாக சாடியிருந்தார். 3 பெண்களை திருமணம் செய்துள்ள இவரால், பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் சாடியிருந்தார். இந்நிலையில், தெலுங்கு துணை நடிகை கராத்தே கல்யாணி, நடன இயக்குநர் ராகேஷ் ஆகியோரையும் அவதூறாக பேசியுள்ளார். இதனால் ஸ்ரீரெட்டி மீது கல்யாணியும் ராகேஷும் சைபர் கிரைம் போலீசில் புகரளித்தனர். இதையடுத்து ஸ்ரீரெட்டி மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

What do you think?

-1 points
Upvote Downvote

விதிமீறிய கட்டடங்கள் : அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

ராஷ்மிகாவிற்கு ஷாக்கிங் முத்தம் கொடுத்த ரசிகர் – வைரல் வீடியோ