சனிக்கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு..!
தட்சிணாமூர்த்தி யோகம், ஞானம், வீணா, வியாக்யான தட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் வழிபடப்படுகிறார்.
தனித்து இருக்கும் முத்திரையே “”சின்முத்திரை”” எனப்படும்.
கட்டைவிரல் தெய்வத்தை குறிக்கும்.
ஞானத்தின் திருவுருவமாக அமர்ந்து தன்னை வணங்குபவர்களுக்கு
ஞானத்தை அள்ளித் தருபவரே தட்சணாமூர்த்தி.
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டை விரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் ஆகிய மூன்றும் தனித்து நிற்கும் அடையாள சின்னமே ‘சின்முத்திரை’ ஆகும். பல கோவில்களில் அருள்பவர் வியாக்யான தட்சிணாமூர்த்தியே ஆவார்.
இதில் கட்டைவிரல் கடவுளைக் குறிக்கும். சுட்டுவிரல் மனிதனைக் குறிக்கும்.
நடுவிரல் ஆசையையும், மோதிரவிரல் கர்மம் ஆகிய செயல்களையும், சுண்டுவிரல் மாயையையும் குறிக்கும். மனிதனை மாயை மறைத்துநின்று, ஆசையை ஏற்படுத்தி, கெட்ட கர்மங்களை செய்ய வைக்கிறது.
அந்த மூன்றையும் மறந்துவிட்டு, இறைவனை வணங்கினால், இறைவனோடு ஐக்கியமாகலாம்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..