ADVERTISEMENT
பொடுகு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு..!
பொடுகு பிரச்சனை என்பது சிலருக்கு தீராத பிரச்சனையாக உள்ளது. பொடுகு என்பது நம் மண்டையில் வெள்ளைநிறத்தில் உதிருவது ஒரு வகை , இரண்டாவது மண்டையில் மெழுகு போலப் படிந்திருப்பது.
இதில் எந்தவிதமான பொடுகு என்றாலும் அதனை போக்க எளிய வைத்தியம் ஒன்று உள்ளது. பொடுகை மருத்துவ ரீதியாக செபோரியா என்று அழைப்பார்கள். பொடுகு முதற்கட்ட பிரச்சனையாக இருந்தால் நம் வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை வைத்தே குணமாக்கலாம்.
பொடுகிற்கு வேப்பிலை, வேப்ப எண்ணெய், வேப்பம்பூ, எலுமிச்சை சாறு இவற்றை பயன்படுத்தியே எளிமையாக சரிசெய்யலாம்.
முதலாவதாக வேப்ப இலைகளை எடுத்து நன்றாக அரைத்து அத்துடன் எலுமிச்சை சாற்றை கலந்து இதனை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை தடவி சுமார் 20 நிமிடங்கள் ஊற வைத்து அதன்பின் குளித்து வர பொடுகு நீங்கும்.
மற்றொன்று வேப்பம் பூவை எடுத்து அரைத்து அத்துடன் எலுமிச்சை சாறு கலந்து அதை மண்டையில் தேய்த்து குளித்து வந்தாலும் பொடுகு பிரச்சனை தீரும்.
இதனை வாரம் ஒரு முறை பயன்படுத்தி வந்தால் பொடுகு பிரச்சனை வராது. இதனால் எந்தவிதமான பக்கவிளைவும் வராது.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.