February 27, 2020
Madhimugam
Exclusive Today Trending சினிமா

விஜய், சூர்யாவுடன் மோத காத்திருக்கும் தனுஷ்?

இந்த வருட கோடைவிடுமுறையில் விஜய்யின் மாஸ்டர், சூர்யவின் சூரரை போற்று படத்துடன், தனுஷின் 40-வது படமும் வெளியாகவுள்ளது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்து வரும் திரைப்படம் ‘மாஸ்டர்’. அசுர வேகத்தில் நடைபெற்று வரும் இதன் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து, கோடை விடுமுறையில் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சூர்யா நடித்துள்ள ‘சூரரை போற்று’ படமும் கோடை விடுமுறைக்கு வெளியாவது உறுதியாகியுள்ளது. மேலும், ஆர்.ஜே,பாலாஜியின் ‘மூக்குத்தி அம்மன்’ படமும் இந்த வரிசையில் இணைந்துள்ளது.

இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 40-வது படமும் கோடை விடுமுறைக்கு வெளிவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லண்டனில் நடைபெற்று வரும் இதன் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்துக்கு ‘சுருளி’ என பெயரிடப்பட்டுள்ளதாக வந்த தகவல் உண்மையில்லை எனவும், தனுஷின் பெயர் மட்டுமே சுருளி என்றும் தற்போது தகவல் வெளியாகியுள்ளன. விஜய், சூர்யா, தனுஷ் ஆகியோரது படங்கள் ஒரே நேரத்தில் வெளியாக இருப்பது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

இணையத்தை கலக்கும் ‘டிராம்பாகுபாலி’ – மிரட்டல் வீடியோ

Digital Team

டிக்-டாக்கில் மனைவியின் வீடியோ; கொலை செய்த கணவன்!

Digital Team

இந்தியாவை ஒயிட்வாஷ் செய்த நியூசிலாந்து

Digital Team

“சத்துணவுத் திட்டம், மனுதர்ம திட்டம் ஆகின்றது” – வைகோ கண்டனம்

Digital Team

‘உள்நோக்கம் இல்லை, வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்’ – திண்டுக்கல் சீனிவாசன்

Digital Team

பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழக அரசுக்கு அற்புதம்மாள் வலியுறுத்தல்!

Digital Team
You cannot copy content of this page
Madhimugam