நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடும் தேதி – கீழமை நீதிமன்றத்தில் பெறலாம்

நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட கீழமை நீதிமன்றத்தை அணுகி, புதிய தேதியை பெற்றுக்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நிர்பயா பலாத்கார கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு விட்டதால், அவர்களை தனித்தனியே தூக்கிலிட அனுமதிக்குமாறு மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இதுதொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நிர்பயா வழக்கில் நான்கு குற்றவாளிகளையும் தூக்கிலிடுவதற்கான புதிய தேதியை விசாரணை நீதிமன்றத்தை அணுகி சிறை நிர்வாகம் பெற்றுக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் மனு தொடர்பாக நிர்பயா குற்றவாளிகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், வழக்கை வரும் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இதற்கிடையே, உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான புதிய தேதியை வழங்குவதில், விசாரணை நீதிமன்றத்திற்கு எந்தத் தடையும் இல்லை எனவும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

What do you think?

ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு எம்.பி., நவாஸ்கனி ஆறுதல்

அசுர பலத்துடன் டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது ஆம்ஆத்மி