ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு வந்த கொலை மிரட்டல் கடிதம்..!! கொலை மிரட்டல் விடுத்த நபர் அதிரடியாக கைது..!!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் 15 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.., அந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது..
இந்த கொலை தொடர்பாக ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பென்னை பாலு உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 15 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.., 6 பேரிடம் போலீஸ் காவலில் எடுத்து தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது..
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு குடும்பத்தையே கொலை செய்து விடுவோம் என கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி சதீஷ் என்ற பெயரில் ஒரு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொற்கொடி, பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதையடுத்து பெரம்பூரில் உள்ள ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அதே சமயம் சதீஷ் யார் என்பது பற்றியும் தீவிர போலீஸ் விசாரணை நடத்தப்பட்டது..
அதன் படி ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்தது பள்ளித் தாளாளர் அருண்ராஜ் என்பது தெரியவந்தது. அவர் தனது பள்ளியில் பணிபுரிந்து வரும் வாகன ஓட்டுநர் சதீஷ் என்பவரது பேரில் கொலை மிரட்டல் விடுத்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது..
அதில் ஆம்ஸ்ட்ராங்கின் குழந்தையை கடத்தி, அவருடைய குடும்பத்தை கொலை செய்துவிடுவதாக மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி, குழந்தை இருக்கும் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த வழக்கில்தான் தற்போது பள்ளித் தாளாளர் அருண்ராஜ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
புதிய பொறுப்பு :
ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது அவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் ஆம்ஸ்ட்ராங் மறைந்ததும் பொற்கொடிக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவரும் தன்னை இனி திருமதி ஆம்ஸ்ட்ராங் என்றே அழைக்குமாறும், பொற்கொடி என்ற பெயரை பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..