பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல்…!! கட்சி பிரமுகர் கைது..!!
ஆற்காடு அரசு மருத்துவமனையில் இருந்த பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த விசிக பிரமுகரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பெண் பயிற்சி மருத்துவர் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அது தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை காவல்துறையினர் கைது செய்த பின் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது., தற்போது இந்த வழக்கில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஆற்காட்டில் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது…
ஆற்காடு ஏரிக்கரை தெருவை சேர்ந்த விசிக பிரமுகரான சேது என்பவர், தனது தந்தையை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். அப்போது பணியில் இருந்தவர்கள் புறநோயாளிக்கான சீட்டை பெற்று வருமாறு கூறியுள்ளனர்..
புறநோயாளிகளுக்கான சீட்டை பெற்று வந்து கொடுத்தும் அவர்கள் சிகிச்சை பார்க்காமல் நேரம் செலவழித்து உள்ளதாக சொல்லப்படுகிறது.., அப்போது அவரது தந்தை வழியில் துடித்துள்ளார்… இதனால் ஆத்திரமடைந்த சேது, மருத்துவமனையில் தகராறில் ஈடுபட்டதோடு, பணியில் இருந்த உதவி மருத்துவர் ரேகா என்பவரை ஆபாசமாகதிட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் தான் வைத்திருந்த செல்போனில் மருத்துவரை படம் பிடித்து மிரட்டிய நிலையில் இதன் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உதவி மருத்துவர் கொடுத்த புகாரில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சேதுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..