ஹத்ராஸ் சம்பவத்தால் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..! சிபிஐ-க்கு விசாரணை மாற்றம்..!
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் நேற்று ஆன்மீக கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் ஆன்மீக சொற்பொழிவாளர் “போலே பாபா” உரையாற்றியுள்ளார்.
அவரின் ஆன்மீக உரையை கேட்க திரளான பக்தர்கள் அதில் பங்கேற்றுள்ளனர். பின்னர் நிகழ்ச்சி முடிந்து பக்தர்க்கல் வெளியே செல்ல முடியாத அளவிற்கு கூட்ட நெரிசலில் சிக்கியுள்ளனர்..
அதில் சிக்கி நேற்று ஒரே நாளில் மட்டும் குழந்தைகள், பெண்கள் என 116 பேர் உயிரிழந்துள்ளனர். அதன் பின், இன்று 5 பேர் என மொத்தம் பலி எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 28 பேர் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் குமார் கூறுவது என்னவென்றால், “ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் தப்பி ஓடிய போலோ பாபா சாமியாரைப் பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கும் விதமாக, அவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா 105, 110, 126 (2), 223 மற்றும் 238 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என அவர் கூறினார்.
உத்தரப்பிரதேசம் தலைமைச் செயலாளர் மனோஜ் குமார் சிங் கூறுகையில், “கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம். “சத்சங்’ அது முடிந்த பிறகு, போலோ பாபாவின் வாகனத்தைப் பின்தொடர்ந்து மக்கள் ஓடியதால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதனால் மக்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டும், மூச்சுத்திணறியும் பெண்கள், குழந்தைகள் என பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரணை நடத்தக் கோரி, வழக்கறிஞர் கவுரவ் திவேதி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
மேலும் இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வலியுறுத்தியும் காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கிட உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அது தொடர்பாக ஆங்கரா ஏடிஜிபி மற்றும் அலிகார் கமிஷ்னர் தலைமையில் தனிப்படை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் விபத்து நடந்த இடத்தை அம்மாநில அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை டிஜிபி ஆகியோர் ஆய்வு செய்து உள்ளனர்.
ஹத்ராஸில் நடந்த விபத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்குப் பிரதமரின் பொது நிவாரண நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இதில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்திரனருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து உள்ளனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..