டெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9-ஆக அதிகரிப்பு !

Delhi violence : டெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது. வடகிழக்கு டெல்லியில் மாஜ்பூர், பாபர்பூர், இப்ராபாத் , புஜன்புராவில் கல்விச்சு தீ வைப்பு சம்பவங்களால் பதற்றம் நிலவி வருகிறது. குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே 3-வது நாளாக மோதல் ஏற்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது. இம்மோதல்களில் 160-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக 2 மாதங்களாக அமைதியான தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இப்போராட்டக்காரர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஆனாலும் போராட்டம் அமைதியாக தொடருகிறது. இந்நிலையில் வடகிழக்கு டெல்லி பகுதிகளான ஜாபராபாத், மெளஜ்பூர், சந்த்பாக், குர்ஜிகாஸ் மற்றும் பஜன்புரா பகுதிகளில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. அதேநேரத்தில் சி.ஏ.ஏ. ஆதரவாளர்கள் இதற்கு எதிராக களமிறங்கினர். இதனால் இருதரப்புக்கும் இடையே பயங்கர மோதல்கள் வெடித்தன. இதில் போலீசார், பள்ளி வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

பலரும் படுகாயமடைந்தனர். இம்மோதல்களில் ரத்தன்லால் என்ற போலீஸ்காரர் உட்பட 7 பேர் பலியாகினர். 160-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். போலீஸ் அதிகாரிகள் சஹத்ரா, அமித் ஷர்மா, அனுஜ் குமார் உள்ளிட்டோரும் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில் இந்த கலவரத்தில் ஏற்பட்ட உயிரிழப்பின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது

What do you think?

உச்சநீதிமன்ற நீதிபதிகள் 6 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிப்பு !

சீனாவை தொடர்ந்து தென்கொரியாவில் கொரோனா வைரஸ் !