திமுகவை தோற்படிப்பது..? ராஜ்தீப் சர்தேசாய் பேட்டி..!!
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெற உள்ளது. அதற்காக தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெறுவதால் தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது என சொல்லலாம்.
இந்நிலையில் மூத்த பத்திரிகையாளரும், பிரபல ஆங்கில ஊடக குழுமமான இந்தியா டுடேவின் கன்சல்டிங் எடிடராருமான “ராஜ்தீப் சர்தேசாய்” நம் மதிமுகத்திற்கு கொடுத்த பேட்டி ஒன்றில் அவர் பேசியதாவது.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியை தோற்கடிப்பது எளிதல்ல என தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ்நாட்டின் சாலைகளில் பயணித்து தொகுதிகளை மதிப்பிடுவதற்கு மூன்று நாட்கள் மிகக் குறைவு. ஆனால், பரந்துபட்டு வேரூன்றியுள்ள திமுக தலைமையிலான கூட்டணியைத் தோற்கடிப்பது எளிதானதல்ல என்றும், அது தனித்துவம் மிக்க சாதகமான தன்மையைக் கொண்டது என்று தெரிவித்துள்ளார்.
பிரதான எதிர்க்கட்சி என்ற இடத்தைப் பிடிப்பதற்கு, 2026 சட்டப்பேரவைத் தேர்தலைக் கவனத்தில் கொண்டு களமாடும் இபிஎஸ் தலைமையிலான அதிமுகவுக்கும், இளம் தலைவரான அண்ணாமலையின் கீழ் ஊடக கவனத்தின் மூலம் கூடுதல் வாக்குகளை ஈர்ப்பதற்கான வாய்ப்புள்ள பாஜகவிற்கும் இடையே போட்டிகள் நிலவுகிறது.
குறிப்பாக குஜராத் மாடலைப் பற்றி நாம் படித்து கொண்டிருக்கிறோம். சமூகநீதி மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டைக் கொண்ட தமிழ்நாடு மாடலை நாம் எப்போது அங்கீகரிக்கப் போகிறோம்..?
இந்தியா முழுவதிலும் உள்ள தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களில் 43% பேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். என்பது உங்களுக்குத் தெரியுமா..? கடந்த பத்து ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட ஒரு பெரும் சாதனை இது. அதிகாரம் பெற்ற பெண்கள், சிறந்த தமிழ்நாடு மற்றும் இந்தியாவை உருவாக்குகிறார்கள்.
தமிழ்நாட்டின் சாலைகளில் பயணித்து தொகுதிகளை மதிப்பிடுவதற்கு மூன்று நாட்கள் மிகக் குறைவு. ஆனால், பரந்துபட்டு வேரூன்றியுள்ள திமுக தலைமையிலான கூட்டணியைத் தோற்கடிப்பது எளிதானதன்று. அது தனித்துவம் மிக்க சாதகமான தன்மையைக் கொண்டுள்ளது.
பிரதான எதிர்க்கட்சி என்ற இடத்தைப் பிடிப்பதற்கு, 2026 சட்டப்பேரவைத் தேர்தலைக் கவனத்தில் கொண்டு களமாடும் இபிஎஸ் தலைமையிலான அதிமுகவுக்கும், இளம் தலைவரான அண்ணாமலையின் கீழ் ஊடக கவனத்தின் மூலம் கூடுதல் வாக்குகளை ஈர்ப்பதற்கான வாய்ப்புள்ள பாஜகவிற்கும் இடையே போட்டி நிலவுகிறது.
ஆனால் எவ்வளவு தான் போட்டிகள் நிலவினாலும் மக்களின் ஆதரவு என்னவோ திமுகவின் கூட்டணி கட்சிகளுக்கு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..