நீட் உயர்கல்வியில் குறைபாடு..! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி கடிதம்..!
நீட் தேர்வு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “கடந்த ஜூன் 28ம் தேதி கடிதம் அனுப்பியதற்கு நன்றி. நீட் தேர்வு நமது உயர்கல்வி அமைப்பில் உள்ள அப்பட்டமான குறைபாடுகளை அம்பலப்படுத்தியுள்ளது. தேசிய அளவிலான மையப்படுத்தப்பட்ட தேர்வு முறை விளிம்பு நிலை மாணவர்கள் மீது உண்டாக்கும் பாதிப்பு குறித்தும் கவனத்தை ஈர்த்துள்ளது.
குறிப்பாக, கடந்த 2004ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி நீட் – இளநிலை முடிவுகள் வெளியானது. பிறகு, மாணவர்களின் நீதிக்காக காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது. மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமையி ன் பெரும் தோல்வியால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களை கடந்த ஒரு மாதத்தில் சந்தித்தேன்.
24 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது நான் ஆற்றிய உரையும், நீட் தேர்வால் ஏழை மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கவனத்தை ஈர்த்தது.
தனியார் பயிற்சி நிறுவனங்களுக்குச் செல்ல முடியாததும், பிற வசதிவாய்ப்புகள் இல்லாததும் கிராமப்புறத்தில் உள்ள திறமையான மாணவர்கள் சமவாய்ப்புடன் போட்டி போட முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. இது நம்முடைய பொதுக்கல்வி நெறிமுறைகளுக்கு எதிரானது ஆகும்.
மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசதி வாய்ப்புள்ள சிலருக்கு மட்டும் வாய்ப்பு கிடைப்பதைத் தடுக்கும் கூட்டுக்கடமை நமக்கு உள்ளது. பொது மருத்துவக் கல்வி முறையைக் கட்டமைப்பதில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக உள்ளது.
இதன் விளைவாக வலுவான பொது சுகாதார அமைப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது. எந்தவொரு முயற்சியும் க ட்டாயம் கண்டிக்கப்பட வேண்டும். தங்களின் கடிதத்துக்காக மீண்டும் ஒருமுறை நன்றி. விரைவில் தங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..