‘பார்க்கிங்’ பணிக்கு குவிந்த பட்டதாரிகள்!!!

10-ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட வேலைக்கு பட்டதாரிகள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மாநகராட்சி சார்பில் அண்ணாநகர், நுங்கம்பாக்கம், புரசைவாக்கம் உள்பட முக்கியமான பகுதிகளில் 2 ஆயிரம் பார்க்கிங் பகுதிகளை உருவாக்கி பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் வாகன ஓட்டிகள் அதற்கான செயலிகள் மூலம் எங்கு பார்க்கிங் வசதி உள்ளது. குறிப்பிட்ட பார்க்கிங் பகுதியில் இடம் இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டு வாகனங்களை அங்கு பார்க்கிங் செய்யலாம். தனியார் நிர்வகிக்க இருக்கும் இந்த பார்க்கிங் ஸ்பாட்டுக்கான கட்டணத்தை ஆன்-லைனில் செலுத்த முடியும்.

முதற்கட்டமாக 222 பகுதிகளில் செயல்படுத்தப்படுவுள்ள இத்திட்டத்திற்காக பார்க்கிங் உதவியாளர் வேலைக்கு ஆட்கள் தேர்வு நடைபெற்றது. இதில் தற்போது வரை 1,400 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 70 சதவீதம் பேர் பட்டதாரிகளும் என்ஜினீயரிங் படித்தவர்களும் விண்ணப்பித்துள்ளனர். 10-ம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட வேலைக்கு பட்டதாரிகள் குவிந்தது, நாட்டில் நிலவிவரும் வேலையில்லா திட்டத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. .

What do you think?

சர்கார், பிகில் இரண்டையும் TRP-இல் துவம்சம் செய்த விஸ்வாசம்!

ஈரானில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க முதலமைச்சர் கடிதம்