பணம் வரவு அதிகரிக்க வழிபட வேண்டிய தெய்வங்கள்..?
மஹாலட்சுமியை வீட்டிற்கு வர ஆசைப்படாத மனிதர்கள் யாரும் கிடையாது. ஆனால் அப்படி நம் வீட்டில் தங்கும் மஹாலட்சுமி (பணம் ) கைகளில் நிற்காமல் செலவாகி கொண்டே இருப்பது தான் கவலையாக இருக்கும்.
பணத்தின் வரவு அதிகரிக்கவும். என்றும் நிலையாக இருக்கவும் எந்த ராசிகளுக்கு எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்.. என்று பார்க்கலாம்
சிம்மம், விருச்சிகம், கும்பம் மற்றும் ரிஷபம் ராசி நண்பர்கள் :
வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று, பாலமுருகனை கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் போதும் சிறப்பு பலனை அளித்து. பிணிகளை அகற்றி தனவரவை கொடுக்கும்.
கன்னி, தனுசு, மீனம், மற்றும் மிதுனம் ராசி நண்பர்கள் :
விநாயகர் மற்றும் சங்கர நாராயணரை, வார்ந்தோறும் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் வழிபாடு செய்தால். நினைத்த காரியங்கள் கைகூடும்.
துலாம், மகரம், மேஷம், மற்றும் கடகம் ராசி நண்பர்கள் :
முனீஸ்வரன் அல்லது 8 அஷ்டலட்சுமிகளில் ஏதேனும் ஒரு லட்சுமியை, வியாழன், வெள்ளி, மற்றும் சனிக்கிழமைகளில் வழிபாடு செய்தால் சிறப்பு பலன் கிடைக்கும். மேலும் தீய வினைகளை தடுத்து நிறுத்தும்.
மேலும் இதுபோன்ற பல தெய்வீக தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
வெ.லோகேஸ்வரி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..