ஒன்றிய அரசால் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதில் தாமதம்…!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை..!!
தமிழகத்திற்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்யாமல் இருந்தாலும், மக்களுக்கு திட்டங்களை கொண்டு சேர்ப்பதில், எந்த பாகுபாடும் இல்லாமல் அரசு செயல்படுத்தி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள திஷா கமிட்டியின் ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரைவைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விசிக தலைவர் திருமாவளவன், மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசின் நிதி கிடைப்பதில் தாமதம் உள்ளதாலேயே, பல திட்டத்தங்கள் மக்களுக்கு சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, மாநில அரசின் திட்டம், ஒன்றிய அரசின் திட்டம், முந்தைய அரசின் திட்டம் என எந்த பாகுபாடுமின்றி மக்கள் நல திட்டங்களை எந்த பாகுபாடுமின்றி தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், ஊதிய நிலுவைத் தொகையாக 2 ஆயிரத்து 118 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்யக்கோரி, அமைச்சர் தங்கம் தென்னரசு, எம்.பி. கனிமொழி ஆகியோர் ஒன்றிய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தும் நிதி வழங்காமல் வஞ்சிப்பதாக குற்றம்சாட்டினார்.
மேலும் செங்கோட்டையன் வைத்த கோரிக்கையை ஏற்று, தேங்காய் விவசாயிகளுக்கு விரைவில் பணப்பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..