பாராளுமன்ற சபையில் நீக்கப்பட்ட கருத்துக்கள்..! ஓம்.பிர்லாவுக்கு ராகுல்காந்தி கடிதம்..!
மோடியின் உலகில் இருந்து உண்மையை நீக்கலாம், யதார்தத்தில் இருந்து உண்மையை நீக்க முடியாது என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறியுள்ளார்..
பாராளுமன்றத்தில் நேற்று நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பேசிய சில வார்த்தைகளின் சில பகுதிகளை நீக்கியது குறித்து இன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.. அவர்களின் கேள்விகளுக்கு காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி பதில் அளித்துள்ளார்..
ராகுல் காந்தி கூறிய பதிலானது., “மோடியின் உலகில் இருந்து உண்மையை நீக்கலாம், யதார்தத்தில் இருந்து உண்மையை நீக்க முடியாது.. நான் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன் அது தான் உண்மை அவர்கள் நான் பேசிய வார்த்தைகளை எவ்வளவு வேண்டுமானால் நீக்கலாம்.. ஆனால் உண்மை எப்போதும் உண்மையே” என காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி செய்தியாளர்கள் முன் கூறினார்..
அதாவது ராகுல் காந்தி பேசியதில் நீக்கப்படுவதாக சொன்ன வார்த்தைகள், பிரதமர் நரேந்திர மோடி குறித்தும், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் குறித்து பேசிய சில விமர்சனங்கள் மற்றும் அக்னீவீர் குறித்து பேசிய சில வார்த்தைகள் போன்றவை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது..
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி சபாபநாயக்கர் ஓம்.பிர்லாவுடன் ஒரு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.. பாராளுமன்றத்தில் தான் பேசியதை நீக்கப்பட்ட வார்த்தைகளை மீண்டும் சபை குறிப்பில் சேர்க்க வேண்டும் என கோரி சபாநாயக்கர் ஓம்.பிர்லாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்..
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..