டெல்லி வன்முறை; பலி எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு!

டெல்லியில் தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்களின் தொடர் போராட்டத்தில், சிஏஏ ஆதரவாளர்கள் புகுந்ததால் வன்முறை வெடித்தது. வட கிழக்கு டெல்லி முழுவதும் வீடுகள் சூறையாடப்பட்டும், தீ வைத்தும் எரிக்கப்பட்டன. இந்த வன்முறையில் பாதிக்கப்பட்டு ஏற்கனவே 38 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதனால், வன்முறையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, வட கிழக்கு டெல்லியில் நிகழ்ந்த வன்முறையின்போது கொலை செய்யப்பட்ட உளவுத்துறை அதிகாரி அன்கிட் சர்மாவின் உடலில் 400 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருப்பதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அவரது கொலை தெடர்பாக ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், வன்முறையைக் கட்டுப்படுத்த தவறிய டெல்லி காவல் ஆணையர் அமுல்யா பட்நாயக்கை மத்திய உள்துறை அமைச்சகம் மாற்றியுள்ளது, அவருக்கு பதிலாக டெல்லி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீவஸ்த்வா வரும் 1 ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.

What do you think?

கொரோனா வைரஸ் – சீனாவை ஓவர்டேக் செய்யும் ஈரான், இத்தாலி

நயன்தாராவை மிரட்டிய ஜக்கி வாசுதேவ் கும்பல்?