டெல்லி முதல்வருக்கு ஜாமின்..!! டெல்லி ரோஸ் அவின்யூ நீதிமன்றம் உத்தரவு..!
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் அளித்து டெல்லி ரோஸ் அவின்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுபான கொள்கை முறைகேட்டில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
குற்றச்சாட்டை தொடர்ந்து, அமலாக்கத்துறையினர் கெஜ்ரிவால் மீது வழக்கு பதிவு செய்து, எட்டுமுறை சம்மன் அனுப்பி இருந்தனர்.
சம்மனை ஏற்றகொண்ட கெஜ்ரிவால் ஆஜராகாமல் புறக்கணித்து வந்தார்.
இதற்கிடையே, கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது.
இந்த நிலையில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ரேஸ் அவென்யூவில் உள்ள நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
அப்போது 8-வது முறையாக அமலாக்கத்துறை சம்மனை நிராகரித்ததற்காக கைது செய்யப்படுவதை தவிர்க்க ஜாமின் வழங்கும்படி கேட்டுக்கொண்டார்.
அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அவருக்கு ஜாமின் வழங்கியது. 15 ஆயிரம் ரூபாய் பத்திரம் மற்றும் 1 லட்சம் பிணைத்தொகையுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர்..
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.