‘டெல்லியில் ஐபிஎல் போட்டிக்கு தடை’ துணை முதலமைச்சர் அறிவிப்பு!

டெல்லியில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளதாக துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்

கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஐபிஎல் போட்டிகளை பார்வையாளர்கள் இல்லாமல் நடத்துமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஐபிஎல் நிர்வாகக்குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளது.

துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா

இந்நிலையில் தலைநகர் டெல்லியில் கோரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பள்ளி, கல்லூரி மற்றும் திரையரங்குகள் அனைத்தும் மார்ச் 31ம் தேதி வரை மூடப்படும் என்று அறிவித்தது. இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக டெல்லியில் ஐபிஎல் போட்டிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக அம்மாநில துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

What do you think?

கொரோனாவால் மூடப்படும் பத்மநாபபுரம் அரண்மனை !

‘கொரோனவால் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு’ ரசிகர்கள் அதிர்ச்சி!