டெல்லியில் ஆம் ஆத்மி முன்னிலை; பாஜகவுக்கு பின்னடைவு

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருகிறது. பாஜக, காங்கிரஸ் கட்சிகள் பின்னடைவை சந்தித்துள்ளன.

டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. 70 தொகுதிகளுக்கான இந்த தேர்தலில் மொத்தம் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று (செவ்வாய்) காலை 8 மணிக்கு தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. காலை 10 மணி வரை வந்த தகவலின் படி ஆம் ஆத்மி கட்சி 51 இடங்களிலும், பாஜக கூட்டணி 19 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. காங்கிரஸ் ஒரு இடங்களில் கூட முன்னிலை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துகணிப்புகள் கூறியிருந்த படி ஆம் ஆத்மியே தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டம், என்.ஆர்.சி ஆகியவற்றால் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆர்வலர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

What do you think?

பில்கேட்ஸின் அதிநவீன சொகுசு கப்பல் 4,500 கோடியா?

ஆயிரத்தை கடந்தது கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை !!!