டெல்லி கலவரத்தில் போலீசாரை துப்பாக்கி காட்டி மிரட்டிய நபர் கைது!

டெல்லி கலவரத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டியநபரை போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன,

டெல்லியில் சிஏஏ எதிர்ப்பு மற்றும் ஆதரவு போராட்டங்களில் உருவான வன்முறை சம்பவத்தால் தலைநகரில் கலவரங்கள் உண்டாகின. குறிப்பாக, கலவரத்தின் போது ஆயுதம் இல்லாத போலீசை நோக்கி துப்பாக்கியை காண்பிக்கும் சிவப்பு நிற டிஷர்ட் அணிந்த நபரின் புகைப்படம் மற்றும் வீடியோ இந்திய அளவில் வைரலாகி வருகிறது.

இதற்கிடையில், போலீசை நோக்கி மற்றும் வேலிக்கு அந்த பக்கம் நோக்கி துப்பாக்கியை காண்பிக்கும் நபர் ஒருபுறம் சிஏஏ ஆதரவு, ஆர்.எஸ்.எஸ், பிஜேபி என்றும், மறுபுறம் சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர் என இருவேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், அந்த நபர் பாரதிய ஜனதா கட்சியின் கபில் மிஸ்ரா அளித்த பேட்டியின் பொழுது அவருக்கு பின்னால் இருப்பதாகவும் ஒரு புகைப்படம் பரவி வருகிறது. இந்நிலையில் டெல்லி கலவரத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டியநபரை உத்தரபிரதேசத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

What do you think?

‘தல’யின் பிறந்தநாளில் சூர்யாவின் சூரரை போற்று!

வைகோவின் கோரிக்கைக்கு வெளியுறவு அமைச்சகம் பதில்