டெல்லி வன்முறை; 167 வழக்குகள், 885 பேர் கைது!

டெல்லியில் வன்முறை தொடர்பாக 167 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, 885 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைநகர் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்தது. கற்கள், பெட்ரோல் குண்டுகள் போன்றவைகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும், துப்பாக்கி சூடு, தீ வைத்தல் போன்ற வன்முறை சம்பவங்களால் 42 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பதற்றம் நிறைந்த பகுதிகளில் துணை ராணுவம் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வன்முறை தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், டெல்லி வன்முறை தொடர்பாக 167 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 885 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுபாடுகளை, பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டுமென காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

What do you think?

ஜடேஜாவின் ஏலியன்ஸ் ரக கேட்ச்!!!

Ind-Nz Test: கோலி ஏமாற்றம்; இந்தியா தடுமாற்றம் – 2வது டெஸ்டிலும் தொடரும் சோகம்