டெல்லியில் ஆட்சி அமைக்கபோவது யார்..?

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் நேற்று மாலை 6 மணி வரை நடந்த வாக்குபதிவில் 54 புள்ளி 65 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது.

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது குடும்பத்துடன் வாக்கினைப் பதிவு செய்தார், அப்போது, பெண்களும், இளைஞர்களும் பெருமளவில் திரண்டு வந்து வாக்கினை பதிவு செய்ய வேண்டும் எனக் அவர் கேட்டுக்கொண்டார். 3 வது முறையாக டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிக்கும் என்றும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைந்திருந்த ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்தியாலா வாக்குச்சாவடியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது மனைவியுடன் வாக்கினைப் பதிவு செய்தார். நிர்மான் பவன் வாக்குச்சாவடியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், அவுரங்கசீப் சாலையில் இருந்த வாக்குச்சாவடியில் ராகுல்காந்தியும் தங்களது வாக்கினைப் பதிவு செய்தனர். காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரும் நிர்மல் பவன் வாக்குச்சாவடியில் தங்களின் வாக்குகளை செலுத்தினர். மாலை 6 மணியுடன் நிறைவடைந்த வாக்குபதிவில் 54 புள்ளி 65 விழுக்காடுகள் பதிவானது. 6 மணிக்கு முன்னதாக வந்து வாக்குச்சாவடி முன்பு வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன் கொடுத்து வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

What do you think?

“பார்த்து நடந்துக்கோங்க முருகதாஸ் தம்பி” – தர்பார் விவகாரத்தில் டி.ஆர் பகீர்

பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழக பட்ஜெட்..!