டெல்லி வன்முறை : காவல்துறையின் மெத்தனப்போககே காரணம் – உச்சநீதமன்றம்!

டெல்லி வன்முறைக்கு காவல்துறையின் மெத்தனப்போககே காரணம் என்று உச்சநீதமன்றம் கருத்து தெரிவித்துள்ளது .

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. வடகிழக்கு டெல்லியின் மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர், சந்த்பாக் என பல்வேறு பகுதிகளிலும் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

நேற்றுவரை நடந்த மோதல்களில் கடைகள், கார்கள் என தங்கள் கண்ணில் பட்டவற்றையெல்லாம் வன்முறையாளர்கள் தீவைத்து கொளுத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்சுகளும் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.இந்த வன்முறை சம்பவங்களில் தலைமை காவலர் ரத்தன் லால் உள்பட 20 பேர் உயிரிழந்தனர். சுமார் 150 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

காவல்துறையின் மெத்தனப்போககே காரணம் – உச்சநீதமன்றம்

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள் டெல்லி வன்முறைக்கு காவல்துறையின் மெத்தனப்போககே காரணம் என்று சாடியுள்ளது ,மேலும் நிலைமையை கைமீறி செல்ல ஏன் அனுமதித்தீர்கள் என்றும் டெல்லியில் வன்முறை நடப்பது துரதிஷ்டவசமானது .என்றும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர் .

What do you think?

2018-ம் ஆண்டு நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் கைது!

தமிழகத்தில் பிஜேபி என்ற ஒரு கட்சி இருக்கிறதா ? H.வசந்தகுமார் !