டெல்லி வன்முறை சம்பவம் : டெல்லி காவல்துறையினருக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு!

டெல்லியில் தலைவிரித்தாடிய வன்முறையை கட்டுப்படுத்த காவல்துறை சிறப்பான நடவடிக்கை எடுத்ததாக டெல்லி உயர்நீதிமன்றம் பாராட்டியுள்ளது

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிக்கு எதிரானவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை வன்முறை வெடித்தது. இந்த சம்பவத்தில் 30 பேர் பலியாகினர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்ல முழு அளவில் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு படையினரை அமர்த்த டெல்லி போலீஸுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மேலும் கலவரத்தை கட்டுக்குள் வைக்கும்படியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, காவல்துறைக்கு உத்தரவு நள்ளிரவில் பிறப்பிக்கப்படுவதற்கு முன்பே காவல்துறையினர் கலவர பகுதிகளுக்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்ததாக நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.

What do you think?

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு வீட்டுவசதி வாரியம் சார்பாக அரசு வீடு ஒதுக்கி அரசாணை வெளியீடு !

ஆசிரியர் தகுதி தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை – பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் !