குழந்தைகளுக்கு பிடித்த சிக்கன் நூடல்ஸ் செய்யலாமா..!
தேவையானப் பொருட்கள்:
-
துண்டாக்கப்பட்ட சிக்கன் – 200 கிராம்.
-
வெங்காயம் – 4
-
கேரட் – 1 கப்
-
நூடல்ஸ் – 250 கிராம்
-
கோஸ் – 1 கப்
-
குடைமிளகாய் – 1 கப்
-
உப்பு – தேவையான அளவு
-
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
-
மிளகாய் தூள் – 3 ஸ்பூன்
-
சோள மாவு – 1 ஸ்பூன்
-
சோயா சாஸ் – 1 ஸ்பூன்
-
மிளகாய் சாஸ் – 1 ஸ்பூன்
செய்முறை:
-
ஒரு வாணலில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். பின் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து எண்ணெய் விரிந்து வரும் வரை வதக்க வேண்டும்.
-
பின் அதில் வேகவைத்து துண்டாக்கப்பட்ட சிக்கனை போட்டு வதக்க வேண்டும்.
-
அனைத்தும் நன்றாக வதங்கியதும் அதில் அனைத்து சாஸ் கலந்து, தேவையான அளவு உப்பு போட்டு கலந்து விடவும்.
-
பின் அதில் கேரட். குடைமிளகாய், கோஸ் சேர்த்து வதக்க வேண்டும்.
-
தண்ணீர் ஊற்றாமல் அனைத்து காய்கறிகளும் நன்றாக வதங்கும் வரை வதக்க வேண்டும்.
-
ஒரு முட்டையை ஊற்றி நன்றாக கலந்து, வேகவைத்த நூடல்ஸ் மற்றும் சோள மாவு கலந்து பின் சிறிது ஆறவைத்து உங்களுக்கு பிடித்த வடிவில் கட்லெட்டை தட்டி எடுத்துக் கொள்ளவும்.
-
ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தட்டி வைத்துள்ள கட்லெட்டை போட்டு பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுக்கவும்.
-
இப்போ சுவையான சிக்கன் நூடல்ஸ் கட்லெட் தயார்.இத்துடன் உங்களுக்கு விருப்பமான சாஸ் வைத்து சாப்பிடலாம்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.