சுவையான மொறு மொறுப்பான வடை..!! இனி நொடியில் செய்யலாம்…!!
இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வடை என்பது சிறந்த சிற்றுண்டியாக இருக்கிறது. காலை மதிய உணவோடு சேர்த்து சாப்பிடுவது மற்றும் மாலை வேளைகளிலும் இதனை பலரும் விரும்பி சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
வடைகளில் பல்வேறு வகைகள் இருக்கிறது ஆனால் அதில் வெங்காய வடை உளுந்தம் பருப்பு வடை இருக்கிறது. குறிப்பாக பருப்பு வடை தான் அதிக அளவு மக்களால் விரும்பி சாப்பிடப்படுகிறது. வடைகள் என்னதான் கடைகளில் கிடைத்தாலும் சுகாதாரமானது தானா என்று உறுதியாக சொல்ல முடியாது . இதனால முடிந்த அளவிற்கு வீட்டில் செய்து சாப்பிடுங்கள்
நம் வடைகளை வீட்டில் சொல்ல வேண்டும் என்றால் முன்னதாகவே அதற்கு படிப்பினை ஊற வைக்க வேண்டும் ஆனா இனி அதற்கு தேவை இருக்காது.. பருப்பு இல்லாமல் வடை சுடுவது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க…
ஒரு கப் பச்சரிசி
ஒரு கப் மோர்
பச்சை மிளகாய் 4
பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒன்று
சீரகம் ஒரு டீஸ்பூன்
எண்ணெய் மற்றும் உப்பு தேவையான அளவு
கருவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு
இஞ்சி ஒரு துண்டு
ஒரு பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள். அதில் நாம் எடுத்து வைத்துள்ள ஒரு கப் பச்சரிசி மாவு, ஒரு கப் மோர், தேவையான அளவு உப்பு எல்லாத்தையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து தோசை மாவு பதத்திற்கு செய்து வையுங்கள்.
அதன் பிறகு அடுப்பில் வாணலியை வைத்து அதில் இந்த மாவை ஊற்றி மிதமான தீயில் வைத்து கைவிடாமல் தொடர்ந்து கிண்டி கொண்டே இருக்கணும். அது கெட்டியாகாமல் இருப்பது மிக முக்கியம். பின்னர் அதில் நாம் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் வெங்காயம் சேர்க்கவும்.
அதன் பிறகு கருவேப்பிலை கொத்தமல்லி இஞ்சி சீரகம் எல்லாத்தையும் சேர்த்து நன்றாக கிளறி விடவும். இவை அனைத்தும் ஒரு சேர வதங்கி வடை மாவு பதத்திற்கு வந்ததும் இறக்கி கொஞ்ச நேரம் ஆறவிடுங்கள்.
இப்பொழுது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் வடை சுட்டெடுக்க போதுமான எண்ணெய் ஊற்றி சூடாகும் வரை காத்திருங்கள். பின்னர் வடமாவை கையில் வைத்து தட்டி ஆயில்லில் போடவும். பின்னர் வடை தட்டி போட்டு அது பொன்னிறமாக மாறும் வரை நன்கு வேக விட்டு எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான மொறு மொறுப்பான வடை தயார்.