ருசியான பன்னீர் நகட்ஸ்… ஈவினிங் ஸ்நாக்..!
பன்னீர் – 400 கிராம்
கார்ன்ஃப்ளார் – தேவைக்கேற்ப
மைதா மாவு – தேவைக்கேற்ப
பிரட்தூள்கள் – தேவையான அளவு
இஞ்சி-பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
ரெட் சில்லி சாஸ் – 2 டீஸ்பூன்
சோயா சாஸ் – 2 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
மிளகுத்தூள் – சுவைக்கு ஏற்ப
உப்பு – ருசிக்கேற்ப
முதலில் பன்னீரை சதுரங்களாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெட்டிய பன்னீர், சில்லி சாஸ், சோயா சாஸ், உப்பு, மிளகுத்தூள் கலந்து கொள்ள வேண்டும்.
இந்த கலவைக்கு 15 நிமிடம் ஓய்வு கொடுத்து ஊற விட வேண்டும்.
ஒரு தட்டில் மைதா மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மற்றொரு தட்டில் பிரட்தூள்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கிண்ணத்தில் கார்ன்ஃப்ளார் மாவை கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
15 நிமிடம் ஊறிய பன்னீரை முதலில் மைதா மாவை தடவி பின் கார்ன்ஃப்ளார் மாவில் மூழ்கி பின் கடைசியாக பிரட்தூள்களை அனைத்து இடங்களிலும் தடவி சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போ ருசியான பன்னீர் நகட்ஸ் தயார் இதை அனைத்து விதமான சாஸ்களுடனும் சாப்பிடலாம்.