ராயபேட்டை துர்க்கை அம்மன் கோவில் அகற்றம்..! நீதிமன்றம் தீர்ப்பு..! அமைச்சர் சேகர்பாபு பேட்டி..!
சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஆதி சென்னை கேசவப் பெருமாள் திருக்கோயில் மரத்தேர் திருப்பணியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தொடங்கி வைத்தார். அதுக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்
திராவிடர் ஆட்சி ஒரு பொற்கால ஆட்சி என்று சொல்லக்கூடிய வகையிலே எங்கு பார்த்தாலும் குடமுழுக்குகள், தேர் திருவிழா, தெப்ப உற்சவம் ஒரு கால பூஜை கூட இல்லாத கோயில்களில் பூஜை திட்டம், ஆதிதிராவிடர் பழங்குடியினர் வசிக்க பகுதிகளில் இருக்கும் கோயில்கள் ஆயிரம் என்று இருந்ததை 1250 ஆக மாற்றி கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 5000 கோயில்கள் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒருகால பூஜை திட்டத்தில் ஒரு லட்சம் என்ற வைப்பு நிதியை முதல்வர் பொறுப்பேற்ற உடன் இரண்டு லட்சமாக மாற்றினார். தற்போதைய சட்டமன்ற அறிவிப்பில் அதைக் கூடுதலாக்கி இரண்டரை லட்சம் ஆக மாற்றினார்.
கோயில்களில் பணிபுரிகின்ற அர்ச்சகர்கள் 13000 என்று இருந்த எண்ணிக்கையை 17 ஆயிரம் ஆக மாற்றி அனைத்து அர்ச்சகர்களுக்கும் ஊக்கத்தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கி கணக்கில் சேருகிற வகையில் முதல்வர் இந்த திட்டத்தை உருவாக்கி இருக்கிறார்.
கிராமப்புறங்களில் இருக்கும் பூசாரிகளின் குழந்தைகளுக்கு கல்லூரி படிப்பிற்கு சுமார் 400 பேருக்கு பத்தாயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கிய நிலையில் 500 பேருக்கு வழங்க இருக்கின்றோம்.
அர்ச்சகர்களுக்கு குடியிருப்பு :
அர்ச்சகர்கள் குடியிருப்பு என ஆட்சி ஏற்பட்ட பிறகு 140 கோடி ரூபாய் செலவில் 350 அர்ச்சகர்களுக்கு குடியிருப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. கோவிலில் பணிபுரிந்த பணியாளர்களுக்கு கருணை அடிப்படையில் பணிகளை 108 பேருக்கு பணி நியமான உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது.
ஆட்சி ஏற்பட்டதிலிருந்து சுமார் 97 கோவில்களுக்கு திருத்தேர் உருவாக்க 58 கோடி நிதியாக வழங்கி இருக்கிறோம். இந்து சமய அறநிலையத்துறையின் அறிவிப்பு படிவார்த்தால் இந்த மூன்று தங்க தேர்கல் புதிதாக உருவாக்க அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த ஆட்சியின் மீதும் இந்து சமய அறநிலையத்துறையின் மீதும் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கையின் காரணமாக இதுவரை உபயதாரர்கள் 920 கோடி வழங்கி இருக்கிறார்கள்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயில்களுக்கு, மன்னர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் 300 கோடி அரசு மானியமாக தமிழக முதல்வர் வழங்கி இருக்கிறார்.
1850 திருக்கோவில்களில் இதுவரை குட முழுக்க நடைபெற்றிருக்கிறது. ஆறு மாத காலத்தில் திருத்தேர் பணி நிறைவு பெறும், இந்தாண்டு இறுதிக்குள் 2000 கோயிலுக்கு திருமுழுக்கு நடைபெற திட்டமிட்டு இருக்கிறோம்.
கிராமப்புற மற்றும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் வசிக்கக் கூடிய பகுதிகளில் 2025 ஆம் ஆண்டுக்குள் பத்தாயிரம் கோயில்களில் குடமுழுக்கு நடத்திட திட்டமிட்டு இருக்கிறோம். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின்படி 115 பேர் பயிற்சியினை முடித்துவிட்டு இருக்கிறார்கள்.
ராயபேட்டை துர்க்கை அம்மன் கோயிலின் ராஜகோபரித்தை தனிப்பட்ட முறையில் அகற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லை, மெட்ரோ பணி நடைபெற இருப்பதால் கோபுரத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதால் ராஜகோபுரத்தை அப்புறப்படுத்த நிர்வாகம் கோரிக்கை வைத்தது இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் இருக்கிறது.
நீதிமன்றத்தில் வரும் தீர்ப்பை பொறுத்து இந்து அறநிலை துறை செயல்படும். திருமஞ்சனம் என்று காரணம் காட்டி விழா காலங்களில் கனகசமய சபை மீது யாரையும் ஏற்றாத நிலையில் இந்த வழக்கின் காரணமாக நீதிமன்றத்தில் திருமஞ்சனத்திற்கு கூட கனக சபையில் பக்தர்களை சட்டத்திற்கு உட்பட்டு அனுமதிக்க வேண்டுமென்று என்ற உத்தரவினை தொடர்ந்து கடந்த ஆண்டு போல் பிரச்சனை இல்லாமல் காலையிலிருந்து பக்தர்கள் கனக சபை மீது ஏறி மகிழ்ச்சியோடு தரிசித்து வருகிறார்கள் என்றார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..