பொன்னேரி அம்பேத்கர் சிலை எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம்..!! ரத்த வங்கியை திறக்க வேண்டி மக்கள் கோரிக்கை..!
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அரசு மருத்துவ மனையில் கட்டி முடிக்கப்பட்ட ஒரு கோடி மதிப்பிலான ரத்த வங்கியை திறக்க வேண்டி தமிழக அரசை வலியுறுத்தி பொன்னேரி அம்பேத்கர் சிலை எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அரசு மருத்துவ மனையில் உள்நோயாளிகள் மற்றும் அறுவை சிகிச்சைக்கான ரத்த வங்கி நிலையம் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அரசு மருத்துவ மனையில் முதல் மாடியில் அமைக்கப்பட்டது. இந்த ரத்த வங்கிக்கு 75 லட்சம் மதிப்பிலான உபகரணங்களும் வழங்கப்பட்டது. சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ரத்த வங்கி நிலையம் தற்போது வரையில் திறக்கப்படாமல் பூட்டியே இருக்கிறது.
இதனால் ரத்தம் தேவைப்படும் நோயாளிகள் சென்னை ஸ்டான்லி மற்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனைகளுக்கு மேல் பரிந்துரைக்காக அனுப்பப்படுகின்றனர். இதனால் ஏற்படும் விபத்து ஏற்படும் நேரங்களில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையின் போது ரத்தம் கிடைப்பதில் சிரமம் இருப்பதாகவும், அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் ரத்தம் திருவள்ளூர் மற்றும் சென்னையில் இருந்து கொண்டு வரப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
நோயாளிகளுடன் செல்வதற்கும் உடன் இருப்பதற்கும் பொன்னேரி பகுதிகளில் இருந்து சென்னைக்கு செல்வதால் பொன்னேரி பகுதி மக்களின் நேரம் மற்றும் சென்னை செல்வதற்கான பயணச் செலவு உள்ளிட்டவை காரணமாக மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இது குறித்து பொன்னேரி அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் அசோகனிடம் புகார் அளிக்கும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் மாவட்டத் தலைவர் ராஜா தலைமையில் பொன்னேரி அம்பேத்கர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.