தமிழ்நாடு மாநிலத்துக்கு நிதி தர மறுப்பதா…? ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்..!!
ஒன்றிய அரசானது தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பதுடன் தமிழகத்திற்கு நிதி தர மறுப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசானது தமிழ்நாடு அரசின் பல்வேறு நலத்திட்டங்களை முடக்கும் விதமாக செயல்பட்டு வருகிறது. கடந்த மக்களவை தேர்தலில் பாஜக வெற்றிபெற்ற இடங்களில் மட்டும் பாஜக செயல்பட்டு வருகிறது., அனைத்து மாநிலங்களையும் சமமாக நடத்த வேண்டிய ஒன்றிய அரசு, தமிழ்நாட்டை மட்டும் வஞ்சிக்கும் விதமாக செயல்பட்டு வருகிறது
தமிழ்நாட்டிற்கு என்று ஒதுக்க பட வேண்டிய நிதியை ஒதுக்கீடு செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளது.., அதை அடிக்கடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குரல் கொடுத்து வருகிறார்.. கடந்த ஆண்டில் மழை வெள்ளத்தால் சென்னையை சம்பித்து போனது சென்னையே நீரில் மூழ்கி பெரும் இழப்புகளை சந்தித்தது. இதற்கு உரிய நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கவில்லை. இந்நிலையில் தமிழகத்துக்கு தர வேண்டிய கல்வி நிதியையும் ஒதுக்கீடு செய்யாமல் புறக்கணித்து வருகிறது.
ஒன்றிய அரசின் கல்வி கொள்கையை தமிழக அரசு நடைமுறைக்கு கொண்டு வர மறுத்ததால் அதை பழிவாங்கும் நோக்கில் அரசுக்கு பல நெருக்கடிகளை கொடுத்து வருகிறது.. தமிழக அரசு கொண்டுவரவுள்ள திட்டங்களுக்கு எல்லாம் நிதி ஒதிக்கீடு செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது . பிரதமர் மோடியின் “பிஎம் ஸ்ரீ ( பிரதமர் பள்ளி திட்டம்) இந்த திட்டத்திற்கு தமிழக அரசு கையெழுத்திட்டால் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழக அரசு மறைமுகமாக ஒன்றிய அமைச்சர் மூலம் பேச்சு வார்த்தைக்கு அழைத்தனர்..
தற்போது சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கும் தமிழ்நாடு மாநிலத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் காலம் தாழ்த்தி வரும் ஒன்றிய அரசிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.. “சிறப்பாக செயல்படும் தமிழ்நாடு மாநிலத்துக்கு நிதி தர மறுப்பதா..? எஸ்எஸ்ஏ திட்டத்துக்கு நிதி ஒதுக்காத போது பிஎம் ஸ்ரீ திட்டத்தை எப்படி நம்புவது” என ஒன்றிய அரசிடம் கேள்வி எழுப்பியதுடன் நேற்று அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது “#NEP-க்கு தலைவணங்க மறுத்ததற்காக சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு நிதி மறுப்பது, அதே நேரத்தில் இலக்குகளை நிறைவேற்றாதவர்களுக்கு தாராளமாக வெகுமதி அளிப்பது – தரமான கல்வி மற்றும் சமத்துவத்தை மேம்படுத்த மத்திய பாஜக அரசு இப்படித் திட்டமிடுகிறதா..? அதை முடிவு செய்ய நம் தேசம் மற்றும் நம் மக்களின் அறிவுக்கே விட்டுவிடுகிறேன்..! என இவ்வாறே பதிவிட்டு ஒன்றிய அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..