இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ந்து வருகிறது. ஒரு டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு 83 ஆக வீழ்ந்துள்ளது. தொடர்ந்து ரூபாயின் மதிப்பு வீழ்ந்து வரும் நிலையில் இது குறித்து வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இதனால் வல்லுநர்கள் பல கருத்துகளை கூறிவந்தனர். இந்நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரூபாயின் மதிப்பு வீழ்வதாக பார்க்க கூடாது டாலரின் மதிப்பு உயர்வதாக தான் பார்க்க வேண்டும் என்று கூறினார்.
இதனால் பல தரப்பு மக்களிடமிருந்து விமர்சனங்கள் எழுந்தது. சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் மீம்ஸ்-களை தெறிக்கவிட்டு வந்தனர். இந்நிலையில்தான் இன்றைய நிலவர படி ரூபாயின் மதிப்பு மீண்டும் வீழ்ந்துள்ளது. இம்முறை நம் நாட்டின் நீதித்துறை அமைச்சர் என்ன கருத்து கூற போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எகிறியுள்ளது.